Why Problem / Choosing the Masters

எஜமான்களைத் தெரிந்தெடுத்தல்

சரியான எஜமான் யார்?

எஜமான்களைத் தெரிந்தெடுத்தல் என்றால் என்ன?
நாம் யாரால் control பண்ணப்படுகிறோம்; அல்லது நம்மை உந்தித் தள்ளும் சக்தி எது என்று (The driving force that controls us) அர்த்தம்.

உதாரணமாக: சிலருக்கு பணம் அவர்களது எஜமானன். பணம் சம்பாதிப்பதே அவர்கள் குறியாக இருக்கும். (But money must be our servant and not the master). சிலருக்கு அவர்களது வேலை, அழகு, படிப்பு, பெருமை, அந்தஸ்து, குலப்பெருமை, உலகம், கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகியவை எஜமான்களாக செயல்படும்.

மேலும் சிலருக்கு ஒன்றுக்கு மேல் எஜமான்கள் உண்டு. ஆனால் இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்வது கூடாது. ஒருவனை சிநேகித்து மற்றவனை பகைப்பான்.

ஒருசிலருக்கு ‘கவலை’ எஜமானாக செயல்படும். இவ்வாறாக தவறான எஜமான்கள் அல்லது ஒன்றுக்கு மேல் எஜமான்கள் வாழ்க்கையை தடம் புரண்டு விடும்.

சரியான எஜமான் யார்?

மனுக்குலத்திற்கு சரியான எஜமான், மனிதனைப் படைத்த கடவுள் மட்டுமே. கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகனும், கஷ்ட நாட்களில் இறைவனை அழைப்பது உண்டு. வாழ்வின் துவக்கத்திலேயே கடவுளை எஜமானாக தெரிந்தெடுத்தால், எல்லா பிரச்சனைகளிலும் அவர் நம் எஜமானாகவும், வேலையாளாகவும் செயல்படுவார்.

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள்! அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்”
மத்தேயு 6:33 – (பரிசுத்த வேதாகமம்)

எஜமான் தரும் நன்மைகள்:

  • சரியான சிந்தனை (Right Thinking)
  • சரியான மனசாட்சி (Right Conscience)
  • சரியான இருதயம் (Right Heart)
  • மனதைரியம், நம்பிக்கை, ஞானம், சமாதானம், சந்தோஷம்
  • மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமை ஆகியவற்றை ஜெயிப்பது
  • ஆவிக்குரிய பெலன், தெய்வீக இளைப்பாறுதல்
  • தேவனைப் பிரியப்படுத்தும் எண்ணங்கள்
  • அசாதாரண தைரியம், தெய்வீக வழிநடத்துதல்

எஜமானின் கட்டளைகள்:

கடவுள் நமக்கு எஜமானாகி விட்டால், அவரது கட்டளைகள் என்ன என்று தெரிந்தால் மட்டுமே கீழ்ப்படிதல் எப்படி என்று புரியும். கடவுள் மனிதனுக்குக் கொடுத்த முதல் பத்து கட்டளைகள் (பத்து கற்பனைகள்) மற்றும் இயேசு கொடுத்த இரண்டு பெரும் கட்டளைகள்:

  • முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள்
  • உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், பலத்தோடும், சிந்தனையோடும் அன்பு கூர்ந்து
  • உன்னிடத்தில் நீ அன்பு கூறுவது போல பிறனிடத்திலும் அன்பு கூறு

இறைவனே உன் எஜமானாகி விட்டால், அவர் சொல்வதைக் கவனி! கீழ்ப்படி! நீ யாருக்கும் ஒன்றுக்கும் பயப்படத் தேவையில்லை! ஏனெனில் உன் மூலமாக செயல்படுவது உன் எஜமானராகிய தேவன்!

  • LISTEN & OBEY!
  • My God is my Master!
  • என் தேவனே எனக்கு எஜமானர்!