Word of God
கர்த்தருடைய வார்த்தை
நம் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கும் வேத புத்தகமே கர்த்தருடைய வார்த்தை! இதன் ஆசிரியர் பரிசுத்த ஆவியானவர். “வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியால் அருளப்பட்டிருக்கிறது. தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” 2 தீமோத்தேயு 3:16,17 - பரிசுத்த வேதாகமம்)
இதை பல உருவகங்களில் வேதம் சித்தரிக்கிறது:
- ஜீவஅப்பம்: - (யோவான் 6:35; மத்தேயு 4:4) தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் உயிருள்ள வார்த்தைகள். இவை நம்மை பிழைப்பூட்டும்.
- ஜீவத்தண்ணீர்: நீதிமொழிகள் 4:23 “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தை காத்துக் கொள்.” அதனிடத்திலிருந்து ஜீவ ஊற்று புறப்படும்.
- களங்கம் இல்லாத ஞானப்பால்: 1 பேதுரு 2:3 நீங்கள் வளரும்படி புதிதாய் பிறந்த குழந்தைகளைப் போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாய் இருங்கள்.
- பாதைக்கு வெளிச்சம்: சங்கீதம் 119:15 உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும் என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
- தேனிலும் மதுரமானது: சங்கீதம் 19:7-10 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. ... அவைகள் பொன்னிலும் மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும், தேன் கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதாயிருக்கிறது.
- திரளான செல்வம்: சங்கீதம் 119:14 திரளான செல்வத்தில் மகிழ்கிறது போல நான் உமது சாட்சிகளின் வழியில் களி கூறுகிறேன்.
- மருந்து: நீதிமொழிகள் 3:7,8 நீ உன்னை ஞானி என்று எண்ணாதே! ... அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும். சங்கீதம் 107:20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களை குணமாக்கி அவர்களை அழிவிற்குத் தப்புவிக்கிறார்.
- அக்கினியும் சம்மட்டியும்: எரேமியா 23:29 என் வார்த்தை அக்கினியைப் போலவும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியை போலவும் இருக்கிறதல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தருடைய வார்த்தையின் தன்மைகள் (Character):
- தேவ ஆவியால் அருளப்பட்டது (Inspired) - 2 தீமோத்தேயு 3:16
- அதிகாரமுடையது (Authoritative) சங்கீதம் 119:89
- மாறாதது – தவறாதது (Infalliable) யோவான் 10:35
- நித்தியமானது - மத்தேயு 24:35
- உயிரோட்டமும் செயல்பாடும் உள்ளது (Living and Active) எபிரேயர் 4:12
வேத வார்த்தைகளின் நோக்கம் (Purpose of God’s Word):
- இரட்சிப்புக்கு (Salvation) ஏதுவானது (ரோமர் 10:17)
- வழிகாட்டி (Guidance) சங்கீதம் 119:105
- ஊக்குவிப்பது (Encouragement) (ரோமர் 15:4)
- திருத்தி அமைப்பது (Correction) 2 தீமோத்தேயு 3:16,17
- மறுரூபப்படுத்துவது (Transformation) - ரோமர் 12:2
தேவ வார்த்தைகளினால் உண்டாகும் நன்மைகள் (Benefits of God’s Word):
- ஞானம் (Wisdom) சங்கீதம் 119:130
- விசுவாசம் (Faith) ரோமர் 10:17
- நம்பிக்கை (Hope) ரோமர் 15:4
- பெலன் (Strength) சங்கீதம் 119:28
- சமாதானம் (Peace) சங்கீதம் 119:165
அணுகுமுறை:
- ஒழுங்காக வாசிக்கவும் (Read Regularly) சங்கீதம் 119:147
- ஆழமாக தியானிக்கவும் (Meditate deeply) சங்கீதம் 119:148
- உண்மையாய் கீழ்ப்படியவும் யோவான் 14:15
- தவறாமல் போதிக்கப்பட வேண்டும் (Study diligently) 2 தீமோத்தேயு 2:15
- இலவசமாக பகிர்ந்து கொள்ளவும் (Share freely) மத்தேயு 28:19-20
திறவுகோல் வசனங்கள் (Key Words of the Bible):
- பாதைக்கு தீபம் கால்களுக்கு வெளிச்சம் (சங்கீதம் 119:105)
- பரிசுத்த ஆவியானவரால் எழுதப்பட்டது (2 தீமோத்தேயு 3:16)
- விசுவாசம் கேள்வியினால் வரும் (ரோமர் 10:17)
- வார்த்தை மாம்சமானது (யோவான் 1:14)
- மனுஷன் அப்பதினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையாலும் பிழைப்பான். (மத்தேயு 4:4)
இப்படிப்பட்ட பொக்கிஷமாகிய கர்த்தருடைய வார்த்தை பெலப்படுத்தி, ஆறுதல் படுத்தி, வழி நடத்துவாராக. ஆமென்!