Sovereignty of God

Sovereignty of God

கடவுளின் சர்வ ஏகாதிபத்தியம்

இது கடவுளின் வல்லமையையும், அவரது குணத்தையும் வெளிப்படுத்தும் அவரது பண்பு ஆகும். அவரது ஆளும் வல்லமையை செயல்படுத்துவது கடவளுக்கு மட்டுமே உரியது. அதை மனிதன் கேள்வி கேட்க முடியாது. கூடாது.

படைக்கப்பட்ட மனிதன் படைப்பாளராகிய கடவுளை நோக்கி, “நீ ஏன் இப்படி என்னைப் படைத்தாய்?" என்று கேட்க முடியாது. ஒரு மண் பானை குயவனை நோக்கி, “நீ ஏன் என்னை ஒரு மண்பானையாக வனைகிறாய்?” என்றோ அல்லது “ஏன் என்னை அழகான ஒரு பூந்தொட்டியாக வனைகிறாய்?” என்றோ கேட்க முடியாது. வீட்டில் மண்ணால் ஆன பாத்திரங்கள் உண்டு. பொன்னால் ஆன பாத்திரங்களும் உண்டு. கனவீனமான பாத்திரங்கள் சில. கனத்துக்குரியவைகள் சில. ஆனால் ஏன் இந்த வேறுபாடு என்று பாத்திரங்கள் கேட்க முடியாது. அது போலவே மனிதனை ஆளுகை செய்வது தேவாதி தேவன் மட்டுமே. அவருக்கு அதற்குரிய முழு உரிமையும் உண்டு.

இன்று உலகில் நடக்கும் பல சம்பவங்களை மனிதன் பார்த்து சொல்வது என்னவென்றால், “கடவுள் ஆளுகையை இழந்து விட்டாரோ? சாத்தான் உலகை ஆளுகை செய்கிறானோ?” என்பதே. மேலும் சுனாமி, கொரோனா போன்ற நேரங்களில் மனிதனின் கேள்வி, “தேவன் மனிதனைக் கை விட்டு விட்டாரோ?” அல்லது “ஏன் அன்புள்ள தேவன் இப்படிப்பட்ட செயல்களை அனுமதிக்கிறார்?” என்று கேட்கின்றனர். இது ஒரு முட்டாள்தனமான கேள்வி! இன்று உலகில் காணப்படும் தீமைகளுக்குக் காரணம் மனிதனே! தேவன் முழு கட்டுப்பாட்டையும் தன் கையில் வைத்திருக்கிறார். ஆனால் மனிதனோ, சூழ்நிலைகளைக் கண்டு தவறாகக் கணிக்கிறான். கடவுள் தன் கட்டுப்பாட்டை இழந்து விட்டார் என்றும் பிசாசாகிய சாத்தானே சகலத்தையும் ஆளுகை செய்கிறான் என்றும் தவறாகக் கணக்குப் போடுகிறார்கள்.

வேதப்புத்தக சான்றுகள்

மனிதன் சூழ்நிலைகளைப் பார்த்து தேவன் ஆளுகையை இழந்து விட்டார். அவரால் ஒன்றையும் கட்டுப்படுத்த இயலவிலலை என்று சொல்லுகின்றனர். ஆனால் வேத வாக்கியங்கள் தெளிவாக தேவன் தாம் சித்தம் கொண்டதை நேர்த்தியாக செய்கிறார் என்றும், அவர் செய்வதை ஒருவராலும் கூட்டவோ, தடுக்கவோ முடியாது என்றும் கூறுகிறது.

இயற்கையும் தேவனுடைய சர்வ ஏகாதிபத்தியமும்

ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் படைத்தார். விஞ்ஞானிகளால் இன்றளவும் வானத்தின் சர்வ சேனைகளையும் கண்டு பிடிக்க முடியவில்லை. ... பெருங்காற்று அவர் சொற்படி செய்யும் என்று வேதம் கூறுகின்றது. சங்கீதம் 148 இதை உறுதிப்படுத்துகின்றது.

அக்கினி, கல்மழை, உறைந்த மழை, மூடுபனி, பெருங்காற்று யாவும் அவரைத் துதித்துப் போற்றுகின்றன என்று எழுதப்பட்டுள்ளது. கர்த்தர் சொன்னதை ஆதியாகமம் 8:22 இவ்வாறு குறிப்பிடுகின்றது. “பூமியிலுள்ள நாளளவும் விதைப்பும், அறுப்பும், சீதளமும், உஷ்ணமும், கோடை காலமும், மாரி காலமும், பகலும், இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

இறைவனின் சர்வ ஏகாதிபத்தியத்தால் மட்டுமே பூமி தன் பலனை மனிதன் அனுபவிக்கும்படியாகத் தருகின்றது.

விலங்குகளும், பறவைகளும், தேவனுடைய சர்வ ஏகாதிபத்தியமும்

இவைகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்: பறவைகளையும், போஷிக்க ஒரு அப்பா (பரம பிதா) உண்டு. புல், பூண்டுகளை உடுத்துவிக்கவும் ஒரு அப்பா உண்டு. எனவே அதை விட சிறந்த மனிதனை ஆதரித்துக் காப்பாற்றும் படைப்பாளரே சர்வ ஏகாதிபத்தியம் உள்ளவர்.