Jesus the Judge

Jesus the Judge

நியாயாதிபதி இயேசு கிறிஸ்துவே

The Judge – Jesus Christ alone!

மரணத்திற்கு பிறகு ஒவ்வொரு மனிதனும் உயிர்த்தெழுதலையும், பின்பு நியாயாதிபதியாகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாக நியாயத்தீர்ப்புக்கு நிற்க வேண்டுமென்பதையும் பரிசுத்த வேதாகமம் வலியுறுத்துகிறது.

நியாயாதிபதியாக இயேசு கிறிஸ்துவே நியாயாசனத்தில் அமர்ந்திருப்பார் என்பதை விளக்கும் தேவனுடைய வார்த்தைகளில் சில:

கிறிஸ்துவாகிய நியாயாதிபதியின் தீர்ப்புக்கு ஒருவரும் தப்ப முடியாது. தீமை செய்தவர்கள் நித்திய ஆக்கினையையும், நீதிமான்களோ நித்திய ஜீவனையும் அடையவும் போவார்கள் என்பது உண்மையிலும் உண்மை. எனவே இந்த உலக வாழ்க்கையில் மிகவும் ஜாக்கிரதையாக வாழ அழைக்கப்படுகிறோம்.

நியாயாதிபதி இயேசுவின் பண்புகள் (Characteristics of the Judge)

நியாயாதிபதியின் பொறுப்புகள் (Judgement Roles)

இப்போது கிருபையின் காலம்! உன் இருதயக் கதவண்டை நின்று தட்டும் உன் நேசர் சத்தம் கேட்டுக் கதவைத் திற! வருவார் உள்ளே – பெருவாய் பேரின்பம் இனி காலம் செல்லாது! இன்றே திறந்திடு - உன் இருதய கதவை!

இரகசிய வருகை (Rapture)

The Judge – Jesus Christ alone!

Rapture என்கிற ஆங்கில வார்த்தைக்கு “எடுத்துக் கொள்ளப்படுதல்” என்று அர்த்தம். இது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டுள்ள அவரது சரீரமாகிய சபைக்கு அவர் கொடுக்கும் பெரிய வெகுமதி ஆகும். ஆனால் சபையாகிய தேவனுடைய சரீரம் இந்த இரகசிய வருகைக்கு ஆயத்தமாயிருக்கிறதா என்பதே இன்றைய கேள்வி!

வேத ஆதாரம் :

இரகசிய வருகையில் பங்கு பெறுவோர்: இயேசுவை விசுவாசித்து, மறுபடி பிறந்து, மரித்த சபையின் மக்கள் மற்றும் உயிரோடிருக்கும் மறுபடி பிறந்த சபை மக்கள். இவர்கள் இயேசுவின் சரீரம் என்னும் பெயர் பெற்ற திருச்சபை. தலை கிறிஸ்துவே.

இரகசிய வருகையின் திட்டம் (The Plan of the Rapture)

இரகசிய வருகையின் காலம்: ஒருவராலும் அறிய முடியாது. திருடன் வருவது போலவும், பிரசவ ஸ்தீரிக்கு திடீரென்று வேதனை வருவது போலவும் இருக்கும்.

இரகசிய வருகையில் இயேசுவால் எடுத்துக் கொள்ளப்பட்டவர்களின் எதிர்காலம்: அவருடன் வந்து ஆயிரம் வருடம் ஆளுகை செய்வார்கள். இயேசு கிறிஸ்துவே ராஜாதி ராஜாவாக பூமியை ஆளுகை செய்வார். சமாதானத்தின் செங்கோல் அவரது கரத்தை விட்டு நீங்காது! ஆனால் இவர்களுக்கு நியாயத் தீர்ப்பு உண்டு.

இரகசிய வருகையின் தூண்கள் (The Pillars of the Rapture)

ஆயத்தமே காரியம்! நமது ஆண்டவரின் இரகசிய வருகையும், இறுதி வருகையும் எப்பொழுது நடக்கும் என்பது நமது காரியமல்ல. ஆயத்தமே காரியம்! ஆதி சீடரே எதிர்பார்ப்புடன் வாழ்ந்தார்கள் என்றால் நாம் எவ்வளவு எதிர்பார்ப்புடனும், ஆயத்தத்துடனும் இருக்க வேண்டும் என் அறிந்து கொள்ளவும்.