மனுக்குலமே! இந்த காலகட்டத்தில் நீ என்ன செய்ய வேண்டும்?

What Human beings should do right now?

கடவுள் யார் என்கிற தேடல் மட்டுமே மனுக்குலத்தின் தீவிர வேட்கையாகவும், வாக்குவாதமாகவும் உள்ள இக்காலகட்டத்தில் — இயேசு கிறிஸ்துவே மெய்யான கடவுள், அவரே மரணத்தை தனது பாடு, மரணம், உயிர்த்தெழுதலின் மூலம் ஜெயித்தவர் என்பதை நாங்கள் தெளிவாக விளக்கியிருக்கிறோம்.

இது கட்டுக்கதை அல்ல — இது சரித்திரம்! இது பொய்யல்ல — சத்தியத்தில் சத்தியம்!

“நானே வழி, சத்தியம், ஜீவன்” என்று கூறிய இயேசு கிறிஸ்துவே மெய்யான கடவுளிடம் சேரும் ஒரே வழி என்பதை நாங்கள் அறிவிக்கிறோம்.

உறவு

நீங்கள் இயேசு கிறிஸ்துவிடம் உறவொன்றை ஏற்படுத்த வேண்டும். தேவனோடு பழக, பாவம் நிறைந்த வழிகளிலிருந்து விலக வேண்டும்.

— சங்கீதம் 1:1

நினைவு

வேத வசனங்களை நினைவில் வைக்க வேண்டும். வாசிப்பதும், தியானிப்பதும், மனதில் பதிப்பதும் கடவுளை அறிய உதவும். மனம் மறுபடியும் ரூபம் அடைய வேண்டும்.

வாழ்வு

நினைவுகள் பரிசுத்தமாவதுடன், வாழ்வும் மாற்றம் அடையும். பழைய பழக்கங்களை விட்டொழிக்க இயலும். அன்பு, சமாதானம், இரக்கம், சாந்தம் போன்ற நற்குணங்கள் மலரும்.

இயேசுவை அறிந்து உறவு வைக்கும் அனைவரின் மனமும் மறுரூபம் அடைகிறது. அதனால் வாழ்வும் பிறருக்கும் ஆசீர்வாதமாக மாறும்.

முடிவு

வாழ்வின் முடிவும் மகிமையானதாக அமையும். தேவனுடன் உறவு கொண்ட அநேகர் வாழ்ந்த சரித்திரம் இதற்குச் சாட்சி. கிறிஸ்தவம் மதமல்ல — அது தேவனுடன் வைக்கும் உறவு.

“அதன் மூலம் நித்திய வாழ்வை பெறுவது சுலபம் — அதனையே உலகம் அறிய கடவுள் உன் வாழ்விலேயே செயல்படுகிறார்.”