இயற்கை சீற்றங்களால் மனிதன் சந்திக்கும் சேதங்கள்
- சீராக சென்று கொண்டிருக்கும் மனிதவாழ்வு தடம் புரண்டு விடுதல்
- வீடுகளை இழத்தல்
- உடமைகள், சுகம், குடும்ப உறவுகள் கூட உடைந்து விடும்
- தனிமை, பசி, பட்டினி
- மனவேதனை மற்றும் உடல் நலிவு
- உதவியற்ற இருள் சூழ்ந்த நாட்கள்
மனிதன் எதிர்கொள்ளும் சவால்கள்
- மனநிலை கட்டுப்பாடு
- மனக்குழப்பங்களை தவிர்த்தல்
- நம்பிக்கையுடன் மீண்டும் எழுதல்
- கடவுளைத் தேடி உறவொன்றை உருவாக்குதல்
- சக மனிதர்களுக்கு உதவத் தயாராகிருத்தல்
- அரசாங்க உதவிகளை நாடுதல்
“தேவனுடைய வல்லமை நம்மை ஆபத்தான சூழ்நிலையிலிருந்து மீட்கும்” — ஏசாயா 9:6
தேவனின் பெயர்கள் மற்றும் தன்மைகள்
- அதிசயமானவர் (Wonderful): லூக்கா 1:37
- ஆலோசனை கர்த்தர் (Counsellor): ஏசாயா 11:2–4
- வல்லமையுள்ள தேவன் (Mighty God): POWER OF THE HOUR is from God alone
- நித்திய பிதா (Everlasting Father): மத்தேயு 5, 6, 7
- சமாதான பிரபு (Prince of Peace): யோவான் 14:1
“தீங்கு நாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்து வைத்து, என்னைக் கன்மலையின் மேல் உயர்த்துவார்.” — சங்கீதம் 27:5
சிந்தனைக்கு
உன்னைத் தேடும் நேசர்
கடவுளைத் தேடி அலையும் மானிடனே!
கடந்து வந்து உன்னைத் தேடும் இறைவன் உண்டென்று
நீ அறிவாயோ?
அவரிருக்கும் இடம் நீ செல்ல இயலாதென்று
நீயிருக்கும் இடம் இறங்கி வந்த இறைவனை
நீ அறிவாயோ?
காடு மேடு ஓடி கண்டவிடம் மேய்ந்து காணாமல் போன
ஆடாகிய உன்னைத் தேடிவரும் தெய்வத்தை
நீ அறிவாயோ?
உன்னையும் என்னையும் செல்வந்தனாக்க
தன்னை வெறுத்த தேவன் தரித்திரனானாரே,
நீ அறிவாயோ?
உன் பாவம் என் பாவம் சுமந்து தீர்த்த
உன்னத தேவன் பலியானாரே சிலுவைமரத்தில்,
நீ அறிவாயோ?
பலியான தேவன் நாற்பதாம் நாளில் பல்லோர் காண
பரம் ஏறிச் சென்றாரே, மறுபடி வருகை தர
நீ அறிவாயோ?
தேடிவந்த தேவன் தரும் தேவசமாதானம்
ஈடிலா அமரிக்கை, அன்பு, நம்பிக்கை,
நீ அறிவாயோ?
வா! வா! இயேசு பாதம்
தருவார் ஆசீர்வாதம்!
வருவாயோ இந்நேரம்!
இன்னும் ஏன் தாமதம் ? ? ?