பொருளாதாரப் பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஒவ்வொரு தனி மனிதனின் பொருளாதாரப் பிரச்சனைக்கும் அநேக அடிப்படை காரணங்கள் உண்டு.
சில காரணங்கள்:
- குடும்பத் தலைவனின் தவறான முடிவுகள்
- காலம் தாழ்த்தி எடுத்த சரியான முடிவுகள்
- வரவுக்கு மேல் செலவு செய்தல்
- பிறரைப் பார்த்து பொறாமையால் தவறான, வேண்டாத செலவுகளைச் செய்தல்
- கடனில் அநேகமாயிரம் மதிப்புள்ள பொருட்களையோ, அநேக லட்சங்கள் மதிப்புள்ள வீடுகளையோ வாங்குதல்
- குடும்பத் தலைவிகளின் அற்ப ஆசைகள் மற்றும் தேவையில்லாத ஆசைகள்
- எது தேவை? (What you need?)
- எது உன் விருப்பம்? (What you want or desire?)
இவை இரண்டிற்கும் வித்தியாசம் தெரியாவிட்டால் தேவையில்லாத பொருட்களை வாங்கி பொருளாதார பிரச்சினையில் விழும் குடும்பங்கள் ஏராளம்.
பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்க்காவிட்டாலும், செல்லம் கொடுத்து, கேட்கும் விலையுயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுப்பதாலும் பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும்.
ஞானம் தேவை. உலக ஞானம் போதாது. பரத்திலிருந்து வரும், தேவபயத்தோடு கூடிய ஞானம் இல்லையென்றால் சுயபுத்தியை சார்ந்து செயல்படும் எவரும் பொருளாதார பிரச்சனையில் நிச்சயமாக சிக்கிக் கொள்ள நேரிடும்.
சில சமயங்களில் குடும்பப் பொறுப்புகள், எதிர்பாராத இழப்புகள், அரசாங்கம் போடும் திடீர் சட்டங்கள், வேலை இழப்பு இவைகளும் பொருளாதார பிரச்சனைகளை உருவாக்கும்.
பொருளாதார பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது:
- முதலாவது பொருளாதார பிரச்சனைகளுக்கு காரணங்களை ஆராய்ந்து பார்த்து அதை சீர் செய்ய வேண்டும்
- செலவினங்களை மட்டுப்படுத்த வேண்டும்
- கடன் வாங்குவதை நிறுத்த வேண்டும்
- குடும்பமாக அமர்ந்து வரவு, செலவு திட்டம் அமைக்க வேண்டும்
- வேதாகம அடிப்படையில் தேவனுக்கு காணிக்கைகள் செலுத்த வேண்டும்
“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும். அமுக்கிக் குலுக்கி, சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியிலே போடுவார்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கு அளக்கப்படும்.”
இயேசு இரண்டு காசு காணிக்கை போட்ட ஏழை விதவையைப் பற்றி புகழ்ந்தார். காரணம், அவள் தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்திற்குரியதெல்லாம் கொடுத்தாள்.
தான தர்மம் செய்யும் போதும், சுய விளம்பரத்திற்காக செய்யாமல், “வலது கை கொடுப்பதை இடது கை அறியக் கூடாது” என்ற வேத வாக்கின்படி செய்ய வேண்டும்.
ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவர் அதனை திருப்பித் தருவார். (நீதி மொழிகள் 19:17)
உதாரத்துவம் இல்லாமல் பிசினித்தனம் செய்தால் வறுமை வரும். அதேசமயம், “உதார குணமுள்ள ஆத்துமா செழிக்கும்” என்பது உண்மை.
இதன் இறுதி தீர்வு
- சுயபுத்தியைச் சாராமல், தேவனை நம்புதல்
- உன் வழிகளிலெல்லாம் தேவனை நினைத்துக்கொள்
- தேவனுக்குப் பயந்து தீமையை விலக்கு
- உன் பொருளாலும், உன் விளைவினாலும் கர்த்தரைக் கனம் பண்ணு
இருக்கும் பொருளைக் காத்துக் கொண்டு, வீண் இழப்புகளைத் தவிர்க்க தேவ ஆலோசனையும், கடவுள் தரும் ஞானமுமே மிகவும் அவசியம்.
வேதாகமத்திலிருந்து பொருத்தமான ஆலோசனைகள்
- நோவாவின் மதுபானப் பழக்கம் — சந்ததிக்கு சாபம்
- ஆகானின் இரகசிய பாவம் — குடும்பத்துடன் அழிவு
- சகேயுவின் அநியாயப் பொருள் — மனந்திரும்பி திருப்பிக் கொடுத்தல்
- காயீனின் கொலை — சாபமுள்ள சந்ததி
- அனனியா, சப்பிராள் — பொய் சொல்லி உயிரிழப்பு
“கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்” (நீதிமொழிகள் 10:22)