சரீர ஆரோக்கியம் குறித்த பிரச்சனைகள்

இன்றைய சூழலில் சரீர சுகம் என்பது வயதின் அடிப்படையில் நிர்மாணிக்க முடியாததாகக் காணப்படுகிறது. குழந்தைகள் பிறக்கும் போதே ஏராளமான ஆரோக்கியப் பிரச்சனைகளோடு குழந்தைகள் பிறக்கின்றன. இதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு.

இந்த பிரச்சனைகளை சந்திப்பது எப்படி?

இதற்கும் கடவுள் ஒருவரே பரிகாரி:

அநேக விதமான வியாதிகள் பாவத்தின் சம்பளமாக மனுக்குலத்திற்கு கிடைத்த ஆசீர்வாதம் ஆகும். எனவே எந்த சூழ்நிலையிலும் ஒரு தனிமனிதன் தன் சரீரம் தீய பழக்க வழக்கங்களால் கெட்டுப் போகாதபடி பாதுகாக்கப்பட வேண்டும் என்று உணர வேண்டும்.

பரிசுத்த வேதாகமம் கூறுவதைக் கேளுங்கள். இதுவே தேவனுடைய சத்தமும் அவரது சித்தமும்; ஆகும். (1 கொரிந்தியர் 6:12–10 பரிசுத்த வேதாகமம்)

எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். இப்படி ஒரு மனிதன் தீர்மானம் செய்து தன் மாம்ச இச்சையை அடக்கும் போது கெட்ட பழக்க வழக்கங்களினால் அடிமைப்பட்டு சரீர சுகத்தை இழக்க முடியாது.

“சரீரம் வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது. கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்.” - இந்த எண்ணம் மனுக்குலத்திற்கு தேவை. இன்று பாலியல் சம்மந்தமான பலதரப்பட்ட வியாதிகளுக்குக் காரணம் மனுக்குலம் தன் சரீரத்தை வேசித்தனம் செய்ய ஒப்புக் கொடுப்பதால் தான் என்பது யாவரும் அறிந்த உண்மை.

வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாகிவிடுகிறார்கள் என்று வேதத்தில் சொல்லியிருக்கிறதே! அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். இதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் முதலாவது அறியவேண்டும்;.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை தெய்வமாக நீ விசுவாசித்து, அவர் தமது சரீரத்தை உனக்காக பாவபலியாக்கினார் என்று நீ விசுவாசித்து, உன் பாவங்களுக்காக மெய்யாகவே மனஸ்தாபப்பட்டு மனந்திரும்பினால், உன் சரீரம் உன்னுடையதல்லவென்றும், உன் சரீரமானது உன் தேவனாலே பெற்றும் உன்னில் தங்கியிருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீ உன்னுடையவன் அல்ல என்றும் அறிய வேண்டும்.

கிரயமாக இயேசு கிறிஸ்துவின் இரத்தம் உனக்காக சிந்தப்பட்டபடியால், உன் சரீரம் தேவனுடையதாகி விடுகிறது. எனவே, சரீரத்தினாலும் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்த வேண்டும் என்பதே தேவனின் இரட்சிப்பின் திட்டமாகும்.

வியாதி அணுகுவதற்கு முக்கிய காரணம்

சரீரம் எவ்வாறு பிரயோஜனப்படுத்தப் படுகின்றது என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

வியாதியும் மருத்துவமும்

இன்று மருத்துவம் மிகப் பெரிய அளவில் முன்னேறிவிட்டது. ஆனால் அதற்கு சவாலாக வியாதிகளும் அதிக அளவில் பெருகி விட்டன. மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்ய முடியும். ஆனால் சுகத்தை ஒருவராலும் கொடுக்க முடியாது.

எனவே வியாதிகளை வரும் முன் தடுப்பதே நல்லது. வியாதி வந்து விட்டால் காலம் தாழ்த்தாமல் அதற்கான சிகிச்சைக்குப் போக வேண்டும்.

தீராத வியாதிகளில் தீர்வு

இங்கு தான் “கடவுளின் செயல்” என்ன என்கிற அறிவு மனிதனுக்குத் தேவை!

2 கொரிந்தியர் 12 ம் அதிகாரம் 8ம் வசனம் முதல் பரிசுத்த வேதாகமத்தில் ஒரு தலைசிறந்த சீடனை சந்திக்கிறோம். அவர் பெயர் பவுல் (Pயரட). அவருக்கு சரீரத்தி;ல் ஒரு ‘முள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது நீங்கும்படி இறைவனிடம் பல முறை அவர் வேண்டுகிறார். ஆனால் தேவன் அவருக்கு கொடுத்த பதில் “என் கிருபை உனக்கு போதும்” என்றார்.

உடனே அந்த பக்தன் வியாதியை மேற்கொள்ள என்ன செய்தான் தெரியுமா? கிருபை தேவனிடமிருந்து வரும் ஈவு என்று அறிந்து பெலவீனங்களில் சந்தோஷமாய் மேன்மை பாராட்டத் துவங்கினார். அதாவது பெலவீனத்தின் மத்தியிலும், “நான் பெலவீனமாயிருக்கும் போதே பெலனுள்ளவனாயிருக்கிறேன்” என்றும் பெலவீனத்தில் அவரது பலம் பூரணமாய் விளங்கும் என்று விசுவாசித்து “கிறிஸ்துவின் வல்லமை என் மேல் தங்கும்படி என் பெலவீனங்களைக் குறி;த்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன். எனக்கு வரும் பெலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும், நான் பிரியப்படுகிறேன்”. என்று பெலவீனத்தை வென்று ஊழியம் செய்ய பலப்பட்டார். (2 கொரிந்தியர் 12:9-11 பரிசுத்த வேதாகமம்)

எனவே வியாதி நேரத்தில் எந்த மனிதனும் கடவுளைத் தேடுவான். ஆனால் நல்ல நாட்களிலேயே கடவுளிடம் ஒரு தனிப்பட்ட உறவு வைக்கப் பழகிக் கொண்டால் இப்படிப்பட்ட வெற்றி வாழ்வின் இரகசியங்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.

மனிதன் தேவனை மன்றாடி விண்ணப்பம் செய்யப் பழக வேண்டும். கடவுள் வேண்டுதல்களைக் கேட்பவர் என்றும், பலன் அளிப்பவர் என்றும் நம்ப வேண்டும். நாம் யாவரும் சுக ஜீவியம் செய்யவே தேவன் விரும்புகிறார். படைப்பாளரின் ஆவல் படைப்புகளின் சரீர சுகம், ஆத்மீக சுகம், மனநலம் மீது படைப்பாளர் வெகு அக்கறை காட்டுகிறார். ஆனால் மனிதன் தன் சரீரத்தை பரிசுத்தமாக பாதுகாக்க முழு முயற்சி எடுக்க வேண்டும்.

சரீரம் மரிப்பதை குறித்தும் பயம்

இயேசுவானவர் வியாதியைக் குறித்தும், சரீரம் மரிப்பதை குறித்தும் நாம் பயப்பட வேண்டாம் என்று கூறும் பகுதியை சற்று ஆழ்ந்து தியானிப்போம். மத்தேயு 10ம் அதிகாரம் 28ம் வசனம் பரிசுத்த வேதாகமம்: “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். ஆத்துமாவையும், சரீரத்தையும், நரகத்தில் அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.”

இது தேவாதி தேவனின் வார்த்தை. தேவன் நமக்கு பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும், அன்பும், தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் என்றும் பரிசுத்த வேதாகமம் கூறுகிறது.(2 தீமோத்தேயு 1:7)

வியாதியினால் சரீரம் மட்டுமே மரிக்கும். ஆத்துமாவும், ஆவியும் அழியாது. கடைசி நாளில், அதாவது சபையாகிய தனது சரீரத்தைக் கூட்டிச் சேர்க்க இறைமகன் இயேசு வரும் நாளில் கடைசி எக்காளம் தொனிக்கும் போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப் பொழுதிலே நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்.

எக்காளம் தொனிக்கும். அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பாh’கள், நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ள நமது சரீரம் சாவாமையையும் தரித்துக் கொள்ள வேண்டும். மரணத்தின் கூர், இயேசுவின் பாடு, மரணம், உயிர்த்தெழுதலினால் ஒடிக்கப்பட்டு விட்டது. பாதாளம் ஜெயிக்கப்பட்டு விட்டது. இதை 1 கொரிந்தியர் 15 ஆம் அதிகாரம் வெகு தெளிவாக பரிசுத்த வேதத்தின் மூலம் போதிக்கிறது. இதைத்தான் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் அல்லது நற்செய்தி என்று கூறுகிறோம். எனவே மரணம் முடிவல்ல. இயேசு கிறிஸ்துவுக்குள் மரிக்கும் ஒவ்வொருவருக்கும் நித்திய ஜீவன் உண்டு. மரணம் ஒரு வாசல். அழிந்து போகும் உலகத்தினின்று, அழியாத பரலோக வாழ்வுக்குள் ஒவ்வொரு விசுவாசியும் செல்ல முடியும். இதுவே வியாதி துன்பங்களில் ஒரு மனிதனின் நம்பிக்கை.

தேட ஒரு காலமுண்டு ! இழக்க ஒரு காலமுண்டு ! காப்பாற்ற ஒரு காலமுண்டு ! எறிந்து விட ஒரு காலமுண்டு ! கிழிக்க ஒரு காலமுண்டு ! தைக்க ஒரு காலமுண்டு ! மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு ! பேச ஒரு காலமுண்டு ! சிநேகிக்க ஒரு காலமுண்டு ! பகைக்க ஒரு காலமுண்டு ! யுத்தம் பண்ண ஒரு காலமுண்டு ! சமாதானம் பண்ண ஒரு காலமுண்டு ! வருத்தப்பட்டு பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? மனுஷர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார். உலகத்தையும், அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார். ஆதலால் தேவன் ஆதி முதல் அந்தம் மட்டும் செய்து வரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான். மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மை செய்வதுமேயல்லாமல் வேறொரு நன்மையும், மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்து தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம். தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன். அதினோடே ஒன்றும் ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது. மனுஷர் தமது சமூகத்தில் பயந்திருக்கும் படி தேவன் இப்படிச் செய்து வருகிறார். (பிரசங்கி 3 : 1-14 . பரிசுத்த வேதாகமம்) இது கடவுளுடைய வார்த்தை! மனித வாழ்வில் நடைபெறும் சம்பவங்கள் ஏன் நடைபெறுகிறதென்று ஒரு மனிதனாலும் அறிய முடியாது. மனுஷர் கடவுளுக்குப் பயப்பட வேண்டும் என்பது கடவுளின் நியமனம். படைப்பாளரை படைப்புகள் கனம் பண்ண வேண்டும். ஆனால், என்று மனிதன் தன்னை உருவாக்கினவரை தூஷித்து, அவர் இல்லையென்று தன் சுய அறிவின் அடிப்படையில் தீர்மானம் செய்கிறானோ அன்று முதல் கடவுள் அவன் வாழ்வில் மேற்கூறிய காலங்களின் அடிப்படையில்; செயல்படும் விதங்களைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் தேவன் செயல்படும் அடிப்படை விதங்களை அவரது வார்த்தையாகிய பரிசுத்த வேதத்தின் மூலம் அறிந்தவர்கள் வாழ்வில் வரும் பிரச்சனைகளை எப்படி கையாளுவது என்று அறிய முற்படுவார்கள். எந்த சூழ்நிலைகளிலும் அப்பிரச்சனையை மேற்கொள்ள தேவ ஞானத்தை வேண்டி நிற் பார்கள். யாக்கோபு அப்போஸ்தலன் சொல்வதைக் கேளுங்கள். “என் சகோதரரே நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும் என்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாய் எண்ணுங்கள்”, என்கிறார். (யாக்கோபு 1 : 3 பரிசுத்த வேதாகமம); பாருங்கள! துன்பங்களையும், சோதனைகளையும் சகிக்க பழகும் போது, அது பொறுமையை உண்டாக்கும். அப்போஸ்தலன் பவுல் சொல்வதைக் கேளுங்கள். “உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையை உண்டாக்கும் என்று அறிந்து உபத்திரவங்களிலேயும் மேன்மை பாராட்டுகிறோம்.” (ரோமர் 5: 3,4 – பரிசுத்த வேதாகமம்). இன்னுமொரு இடத்தில் இதே பவுல் அடியாh,; தன் சரீரத்தில் உள்ள வியாதியை முழு மனதோடு ஏற்றுக் கொள்வதற்கான காரணத்தைக் குறித்து கூறுவதைக் கவனியுங்கள். “அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.” ( 2 கொரிந்தியர் 12: 8 முதல் 10 வசனங்கள் - பரிசுத்த வேதாகமம்) பாருங்கள்! பிரச்சனைகளில் ஒரு தனி மனிதன் கடவுளுக்குள் தன் காலங்கள் நியமிக்கப் பட்டிருக்கிறது என்று நம்புவதால் வாழ்வின் பிரச்சனைகளில் பொறுமை, விசுவாசம், சகிப்பு , மேன்மை பாராட்டல் போன்ற பண்புகளை உருவாக்குகிறான். கடவுளை கேள்வி கேட்க முற்படவில்லை. அல்லது தன்னையே மாய்த்துக் கொள்ள ஓடவில்லை. மாறாக அந்த சூழ்நிலையை தன்னை ஒருபடி மேலோங்கி நிற்கச் செய்யும் நற்பண்புகளை வளர்க்கும் சாதனங்களாகக் கருதுகிறான். மேலும் ஒரு அன்புள்ள தகப்பன் தன் பிள்ளையை ஏன் சிட்சிப்பான்? அவனை நல்வழிப்படுத்தவே அன்றி வேறொன்றிற்கும் அல்ல. இதை அறிந்து பிள்ளைகள் பெற்றோருக்கு அஞ்சி நடக்கிறார்கள் அல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள். இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். (எபிரேயர் 12 : 9 – 10. பரிசுத்த வேதாகமம்) இவைகள் தான் கடவுளின் கண்ணோட்டத்தை அறிந்து கடவுளுக்கு பயந்து வாழும் மனிதன் வாழ்வின் பிரச்சனைகளை சந்திக்க அறிந்து வைத்துக் கொள்ள வேண்டிய அடிப்படை சத்தியங்கள் ஆகும்.